தமிழகத்தில் 4343 பேருக்கு கொரோனா; சென்னையில் 2316 பேருக்கு உறுதி!

Published:

corona virus
corona virus

தமிழகத்தில் இன்று 4343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று அதிகபட்சமாக, 2,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. 

இன்று 4ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதைத் தொட்ர்ந்து, தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 98,392 பேராக உயர்ந்துள்ளது. 

அதே நேரம், தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 56,021ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 3,095 பேர் டிஸ்சார்ஜ்செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் 

தமிழகத்தில் முதன்முறையாக, ஒருநாள் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள எண்ணிக்கை 4,000ஐ தாண்டியுள்ளது. 

covid julyb
covid julyb

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்த போது 

தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 98,392 பேராக உயர்வு கண்டுள்ள்து என்றும், தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 56,021ஆக அதிகரித்துள்ளது என்றும் கூறினார். 

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 75,000 படுக்கை வசதிகள் உள்ளன என்று குறிப்பிட்ட அவர், இதுவரை 12,39,692 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். 

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

இவ்வளவு பாதிப்புகள் தெரியவந்த போதும், தமிழகத்தில் கொரோனா தொற்றுநோய் சமூக பரவலாக மாறவில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஐ.சி.எம்.ஆர் ஆய்வு முடிவுகளின் படி, அவர்கள் உறுதி செய்திருக்கும் நிலையில், சமூக தொற்றாக மாறவில்லை என்று குறிப்பிட்டார் விஜயபாஸ்கர். 

ஒருவருக்கு கொரோனா உறுதியானால், அவருடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து இடைநிற்றலின்றி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றார். உயிர்காக்கும் காக்கும் உயர் மருந்தான ரெம்டெசிவர் தடுப்பு மருந்துகளை 10,000 என்ற அளவில் தமிழகம் பெற்றுள்ளது என்று கூறினார் அவர். 

தமிழகத்தில் சென்னையில் இன்று இரண்டாயிரத்தைக் கடந்து பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது சென்னையில் 2027 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது 

சென்னையை அடுத்துள்ள மாவட்டமான செங்கல்பட்டில் 171 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 112 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 164 பேருக்கும் கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது 

சென்னை மண்டலத்தை அடுத்து மதுரையில் அதிகபட்சமாக 273 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களிலும் 100ஐ கடந்து பாதிப்பு பதிவாகியுள்ளது 

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 133 பேருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 பேருக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 127 பேருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 167 பேருக்கும் வேலூர் மாவட்டத்தில் 137 பேருக்கும் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

Related articles

Recent articles

spot_img