உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ., குமரகுருவுக்கு கொரோனா தொற்று!

சற்றுமுன் சென்னை தமிழகம்
ulundurpettai mla kumaraguru
ulundurpettai mla kumaraguru

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதை  அடுத்து அவர் சென்னை க்ரீன்வேஸ் ரோடில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே இதயக் கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் குமரகுரு. இதற்காக அவர், மாதந்தோறும் வழக்கமான மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதாகக் கூறப் படுகிறது. இந்நிலையில் திடீரென அவருக்கு மூச்சு விடுதலில் சிரமம் இருந்ததாகக் கூறப்பட்டு, சென்னை க்ரீன்வேஸ் ரோடில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அவருக்கு கொரோனா தொற்று குறித்த பரிசோதனை செய்யப் பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தனிமைபடுத்தப்பட்ட வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது குடும்பத்தினர் உட்பட அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளபடவுள்ளதாக தகவல் வெளியானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.