மதுரை பல்கலை., உள்ளிட்ட இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் ஆய்வு!

சற்றுமுன் மதுரை
madurai corona centre inspect
madurai corona centre inspect

மதுரை: மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனையில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவமனையை , மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை கணிப்பாய்வு அலுவலர் பிற்படுத்தப் பட்டோர் நலன் சீர்மரபினர் நலன் மற்றும் பிற்படுத்தப் பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் , ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவ மனையில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவமனையில் உடனடியாக 150 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பொறுத்துவதற்கு அறிவுறுத்தினார்.

மேலும் , மருத்துவமனை வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் 400 ஓ 300 சதுர அடி பரப்பளவில் 1000 படுக்கைகள் கொண்ட தற்காலிக கூடாரம் அமைப்பதற்கும்
அதற்கு அருகாமையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கழிப்பறை, குளியறை வசதிகள் ஏற்படுத்துவ தற்கும் திட்டமதிப்பீடு அறிக்கை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை மருத்துவ கட்டமைப்பு செயற் பொறியாளர் அவர்களுக்கு உத்தரவிட்டார்.

madurai corona centre
madurai corona centre

பின்னர் , மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் ஆண்கள் விடுதியில் கொரோனா கேர் சென்டர் அமைக்கப் பட்டுள்ளதையும் அதில் ,படுக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது ,மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.டி.ஜி.வினய் கூடுதல் ஆட்சியர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ப்ரியங்கா பங்கஜம், மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) கண்ணன், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை முதல்வர் மரு.சங்குமணி, பொதுப்பணித் துறை(மருத்துவ கட்டமைப்பு) செயற் பொறியாளர் .சர்புதீன், உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) செல்லதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.