கொரோனா பீதியில் சுகாதார பணியாளர் தற்கொலை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் மதுரை
corona vaccine
corona vaccine

மதுரையில் கொரோனா பீதியால், சுகாதார பணியாளர் வீட்டிலே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸார் கூறியது:

மதுரை அருகே ஆணையூர் காலங்கரையில் வசிப்பவர் மாரியப்பன் 55. இவர் அப்பகுதியில் சுகாதார பணியாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததாம். இதனால் அவர், தனக்கு கொரோனா இருக்குமோ, என்ற அச்சத்தில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுபற்றி, கூடல்புதூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.