கொரோனா… சென்னையில் குறையுது… மாவட்டங்களில் எகிறுது!

Published:

corona virus
corona virus

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:

  • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு.
  • சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,203 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 71,230 அதிகரிப்பு.
  • தமிழகத்தில் மேலும் 65 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 1,636 ஆக உயர்வு.
  • தமிழகத்தில் ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை 71,116 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 3616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,594ஆக உயர்வு கண்டுள்ளது.

 சென்னையில் மட்டும் இன்று 1203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டது. சென்னையில் தொடர்ந்து 6ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில் சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

தமிழகத்தில்இன்று ஒரே நாளில் 65 பேர்   உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா  உயிரிழப்பு எண்ணிக்கை 1,600ஐ தாண்டி, 1,636ஆக அதிகரித்து  உள்ளது.

அதேநேரம் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 4545 பேர் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் இதையடுத்து தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 71,116ஆக அதிகரித்துள்ளது. 

இன்று சென்னையில் 1203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு  மொத்த எண்ணிக்கை 71230ஆக உயர்வு  அடைந்து உள்ளது

அதேநேரம் சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 2413 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டது

சென்னையில் இன்று ஒரே நாளில் 39 பேர் கொரோனாவுக்கு  உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு, மதுரையில் இன்று ஒரே நாளில் தலா 8 பேர்  உயிரிழந்துள்ளனர்.

 சென்னையை எடுத்து அதிக பாதிப்பு உள்ள பகுதியாக மதுரை திகழ்கிறது மதுரையில் இன்று ஒரே நாளில் 334 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டது மதுரையை அடுத்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் 253 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டது

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

 அதுபோல் தென் மாவட்டங்களான திருநெல்வேலி மாவட்டத்தில் 181 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 144 பேருக்கும், கன்னியாகுமரி   மாவட்டத்தில் 119 பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் 62 பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு தகவல்:

districtwise details corona july
districtwise details corona july

Related articles

Recent articles

spot_img