தமிழகத்தில் 4,496 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.5 லட்சத்தைக் கடந்தது!

Published:

corona virus
corona virus
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:
  • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்வு.
  • சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,291 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 80,961 அதிகரிப்பு.
  • தமிழகத்தில் மேலும் 68 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 2,167 ஆக உயர்வு.
  • தமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை 1,02,310 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 4496 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம்  கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5000 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,02,310ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 4496 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து,  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டியது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,51,820ஆக உயர்ந்துள்ளது. 

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

சென்னையில் மட்டும் இன்று 1291 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,000ஐ தாண்டியது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,961ஆக உயர்ந்தது.. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 68 பேர்  உயிரிழந்தனர் இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 2,167ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.  சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 3205 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது .

மாவட்ட வாரியாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம்

district-wise-corona-cases-in-july-15
district-wise-corona-cases-in-july-15

Related articles

Recent articles

spot_img