தமிழக கலாசாரத்திற்கு தமிழர் பண்பாட்டிற்கு துரோகம் செய்ய எண்ணுகிறது திமுக!

stalin ajnali mayday 1
stalin ajnali mayday 1

“இராணுவ உடையில் திருக்குறளை சுட்டும் பிரதமர் ‘ராணுவத்தில் தமிழர் பங்கு’ என்ற CBSE பாடத்தை நீக்குகிறார். தமிழர் நேசிக்கும் சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், ம.பொ.சி-ன் எல்லைப் போராட்டம் ஆகியவற்றை மீண்டும் இணைக்க மறுத்தால் இம்மண்ணில் NOTA வை தாண்டுவதைக் கூட பாஜக மறந்துவிடலாம்!” என்று தி மு க தலைவர் திரு ஸ்டாலின் கூறியுள்ளார்.

சி பி எஸ் இ தமிழ் பாடமானது மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பாடத்திட்டத்தின் படியே அமைந்துள்ளது. கொரோனா பேரிடர் காரணமாக மாணவர்களின் சுமையை குறைப்பதற்காக சி பி எஸ் இ கல்வி வாரியமானது, இந்த கல்வியாண்டிற்கான அனைத்து பாடங்களிலும் 30 விழுக்காட்டை குறைத்து, திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள ஒன்பது இயல்களில் முதல் ஆறு இயல்களை வைத்து கொண்டு, மீதமுள்ள மூன்று இயல்களை நீக்கியள்ளது. இந்த இயல்களில் திரு.ஸ்டாலின் அவரகள் குறிப்பிட்ட தலைப்புகள் அல்லாது ராமானுஜர் குறித்த பாடம், நாச்சியார் திருமொழி(ஆண்டாள்) உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளும் இடம் பெற்றிருந்தன என்பதை ஸ்டாலின் அவர்கள் மறந்து விட்டாரா? மறைத்து விட்டாரா? இந்த் பாடங்களை நீக்குவதற்கு பதில் வேறு எந்த பாடங்களை நீக்க வேண்டும் என்கிறார் திரு. ஸ்டாலின் அவர்கள்?

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

9ம் வகுப்பு பாடத்திட்டத்தில் முதல் இயலில் திராவிட மொழி குடும்பம் என்ற தலைப்பிலும், கல்வி மற்றும் கல்வியிற் சிறந்த பெண்கள் என்ற தலைப்பிலும் பாடங்கள் இடம்பெற்றுள்ளது. அப்படியென்றால், திராவிட மொழி குறித்தும், கல்வியில் பெண்களின் பங்கு குறித்தும் உள்ள பாடங்களை நீக்கியிருக்க வேண்டும் என்கிறாரா திரு.ஸ்டாலின் அவர்கள்?

அதே போல் மூன்றாம் இயலில், பண்பாடு என்ற தலைப்பில் ‘ஏறு தழுவுதல்’ குறித்த பகுதி இடம் பெற்றுள்ளது. நம் தமிழர் பண்பாடான ‘ஜல்லிக்கட்டு’ குறித்து மாணவர்களுக்கு போதிக்க கூடாது என்று எண்ணுகிறாரா திரு.ஸ்டாலின் அவர்கள்? ஏற்கனவே தி மு க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் காளைகளை காட்சிப்படுத்தக்கூடாத பட்டியலில் இணைத்து தமிழக கலாச்சாரத்திற்கு துரோகம் செய்யப்பட்டதை தொடர்கிறதா தி மு க என்ற சந்தேகம் எழுகிறது.

மேலும்,10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் தமிழ் சொல் வளம், தமிழர் பண்பாடு, திருக்குறள் அறிவியல் மற்றும் சுற்றுசூழல் குறித்த பல்வேறு பாடங்கள் இருக்கும் நிலையில் அவைகளை நீக்கியிருக்க வேண்டும் என்கிறாரா திரு. ஸ்டாலின் அவர்கள்? தமிழ் சொல் வளம் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்று தி மு க ஏன் எண்ணுகிறது?

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

மாநில பாடத்திட்டத்திற்கு ஆன்-லைன் வகுப்பே கூடாது என்று கூறும் திமுக, பாடங்களை நடத்தாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வலியுறுத்தும் தி மு க, சி பி எஸ் இ பாடத்திட்டத்தில் 30 விழுக்காடு குறைப்பதை கண்டிக்கும் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் எரிச்சலோடு பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

சி பி எஸ் இ வாரியத்தை பொறுத்தவரையில், பல கல்வியாளர்களை, வல்லுநர்களை கலந்தாலோசித்த பின்னரே ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் எந்த பாடங்களை நீக்க வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தி மு கவும் மற்ற எதிர்கட்சியினரும் கல்வியில் அரசியல் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மாணவர்களை படிக்க விடுங்கள். முன்னேற விடுங்கள். பாழும் அரசியல் உள்நோக்கத்தினால் மாணவ , மாணவிகளின் எதிர்காலத்தை பாழாக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ளுங்கள் என்று தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்களை கேட்டு கொள்கிறேன். இல்லையேல், வரக்கூடிய தேர்தலில், 2014 தேர்தலில் தி மு க வுக்கு கிடைத்த இடங்களையே மக்கள் மீண்டும் அளிப்பார்கள்.

  • நாராயணன் திருப்பதி
    (செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி)
ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories