பணத்தை திருப்பிக் கேட்டால் வீடியோ வெளியிடுவேன்.. திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி பெண்ணிடம் நகை பணம் பறித்து மோசடி!

சற்றுமுன் தமிழகம்
kanyakumari

“திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலித்து கடைசியில் என்னை ஏமாற்றி விட்டார். நகை, பணத்தையும் வாங்கி கொண்டார், நடவடிக்கை வேண்டும்” என்று ஃபேஷன் டிசைனர் பெண் ஒருவர் இளைஞர் மீது புகார் தந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பெருமாள்புரத்தில் வசித்து வந்த பெண்ணுக்கு 28 வயதாகிறது. 2013-ல் இவருக்கு கல்யாணமாகி உள்ளது. ஆனால் கணவனை 3 மாதங்களிலேயே பிரிந்து விட்டார். டைவர்ஸ் கேஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

ஃபேஷன் டிசைனராக இந்த பெண் வேலை பார்த்து வருகிறார். அப்போதுதான் கேபிள் நிறுவனம் நடத்தி வரும் லோகேஷ் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

ஃபேஸ்புக் நண்பர் அவர்.. அவருக்கும் 28 வதயாகிறது.. பெண்ணை மறுமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதை நம்பி, அந்த பெண்ணும் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.. அடிக்கடி வெளியூர்களுக்கும் சென்று ஜாலியாக இருந்து வந்துள்ளனர். இந்த சமயத்தில்தான், லோகேஷ் குமார் ஆபீஸ் வளர்ச்சிக்காக, பெண்ணிடம் 30 பவுன் நகைகளை வாங்கியுள்ளார்.

பிறகு கார் வியாபாரம் செய்யப் போவதாக சொல்லி 5 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்… ஆனால், பணமும், நகையும் திருப்பி தரவும் இல்லை என தெரிகிறது. கடைசியில் கல்யாணமும் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் சொன்னாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

அந்த புகாரில், “லோகேஷ் குமார் நெருங்கி பழகினார். ஆனால் கல்யாணம் செய்ய மறுத்துவிட்டார். நான் அவர் வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டதற்கு, லோகேஷ் குமாரும் அவரது அம்மா கீதா குமாரி, மாமா அய்யாசாமி, நண்பர் பிரதீப் ஆகியோர் சேர்ந்து என்னை தகாத வார்த்தைகளில் பேசி தாக்கினார்கள். பணம் மற்றும் நகையை நான் திருப்பி கேட்டதற்கு, என்னுடன் நெருக்கமாக இருந்தபோது எடுத்த போட்டோக்களையும், வீடியோக்களையும் சோஷியல் மீடியாவில் பரப்பி விடுவதாக லோகேஷ்குமார் மிரட்டினார்.

எனவே, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து, மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து லோகேஷ் குமாரை கைது செய்தனர். ஆனால், அவரது அம்மா, மாமா, நண்பர் என 3 பேருமே தலைமறைவாக உள்ளதால் தேடி வருகிறார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.