
- இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு
- தமிழகம் – 4807 (165714)
- சென்னை – 1219 (84598)
- மரணம் – 88
தமிழகத்தில் மேலும் 4807 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் அதிகபட்சமான இன்று 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 4,807 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,714ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இது தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு.
இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்ததை அடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 2,400ஐ தாண்டியது! தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 2,403 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 1219 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதை அடுத்து, சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,598ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று 4807 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப் பட்டுள்ள போதும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பார்த்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். உயர்தர உயிர்காக்கும் மருந்துகள் அரசிடம் உள்ளன என்றும், தென் தமிழகத்தின் சிறந்த மருத்துவமனையாக நெல்லை அரசு மருத்துவமனை உள்ளது. என்றும் கூறியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், வளர்ந்த நாடுகள் கூட படுக்கை வசதிகள் இல்லாமல் திணறுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். .
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,049 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,13,856ஆக அதிகரித்துள்ளது
மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்:

தென்மாவட்டங்களில் எகிறுது கொரோனா கணக்கு:
இன்று 18.07.2020 சுகாதாரத்துறை அறிக்கையின் படி,
திருநெல்வேலி மாவட்டத்தில் – 155
தூத்துக்குடி மாவட்டத்தில் – 160
தென்காசி மாவட்டத்தில் – 91
கன்னியாகுமரி மாவட்டத்தில் – 144
பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.