கொரோனா: கேப்டன் தொலைக்காட்சியின் நிரூபர் உயிரிழப்பு!

சற்றுமுன் தமிழகம்
captaion-tv

கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் கேப்டன் தொலைக்காட்சியின் திருப்பதி நிரூபர் உயிரிழந்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. மேலும் கொரோனாவல் ஏற்படும் மரணங்களும் கடந்த வாரங்களில் அதிகமாகிக் கொண்டே செல்வது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் திருப்பதியில் திடீரென கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கேப்டன் தொலைக்காட்சியின் திருப்பதி நிருபராக இருந்த சுப்ரமணியம் என்பவர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் மூச்சுதிணறல் காரணமாக திருப்பதியில் உள்ள பத்மாவதி கொரோனா வார்ட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.