December 13, 2025, 4:03 PM
28.1 C
Chennai

“Generation Gap என்கிறார்களே, அது என்ன?”

1468655 1441783222789103 1313408209319416244 n - 2025

“Generation Gap என்கிறார்களே, அது என்ன?” (கேள்வி கேட்டு விளக்கமளித்த
பெரியாவாளின் பதில் உடனிருந்த ஆங்கிலம் மெத்தப்
படித்தவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.)

சொன்னவர்-என்.ராமஸ்வாமி-செகந்தராபாத்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

கர்நாடகத்தில் பெல்காம் அருகில் மகா ஸ்வாமிகள் தங்கியிருந்த சமயம். நான் என்
குடும்பத்தாருடன் தரிசனத்துக்குச் சென்றிருந்தேன்.

பெரியவாளை என் தந்தை நமஸ்கரித்தபோது, “இவர்,ஹூப்ளி ராமஸ்வாமியின் தகப்பனார்”
என்று அணுக்கத் தொண்டர் தெரியப்படுத்தினார்.
(நான் அப்போது ஹூப்ளி ரயில்வே டிவிஷனில் அதிகாரியாகப் பணியாற்றிக்
கொண்டிருந்ததால், ‘ஹூப்ளி ராமஸ்வாமி’ என்று ஸ்ரீமடம் பணியாளர்கள் பட்டம்
சூட்டியிருந்தார்கள்.!)

“உன் பெயர், நாராயணன் தானே?” என்று பெரியவா கேட்டதும், “ஆமாம்” என்றார், என்
தந்தை.

பின்னர் நான் நமஸ்காரம் செய்தேன்.அப்போது
அதே தொண்டர், “சாமிநாதனின் (மகன்) அப்பா” என்று கூறி அறிமுகப்படுத்தினார்.

வழக்கமான விசாரணைகள்,கேள்வி-பதில்கள்,
சொந்த ஊர் பற்றிய தகவல்கள்.பத்து நிமிஷமாயிற்று.

பெரியவா என்னைப் பார்த்து, ” நீதான் பெரிய லேபர் ஆபீஸராச்சே? Generation Gap
என்கிறார்களே, அது என்ன?” என்று சற்றுப் புன்முறுவலுடன் கேட்டார்கள்.

நான் ஏதேதோ சொன்னேன். நான் சொல்வது சரியான விளக்கம் இல்லை என்பது எனக்கே
புரிந்துதான் இருந்தது. ஒரு வழியாக நான் பேசி முடித்தவுடன், அந்த மகான்
சொன்னார், “பழைய காலத்தில் ஒருவரை அறிமுகப்படுத்தும்போது – இன்னார் பையன் இவன்
என்பார்கள்.பூணூல் போட்டுக் கொண்டிருப்பவர்கள் அபிவாதயே என்று தொடங்கி, தங்கள்
கோத்ரம் – ஸூத்ரம் – நாமம் எல்லாம் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்.
இப்போ,மாறிடுத்து,பார் – இவர், இன்னாருடைய அப்பா என்று சொல்ற தலைகீழ் நிலை
வந்திருக்கு, இதுதான் Generation gap!” என்றார்கள்.

உடனிருந்த ஆங்கிலம் மெத்தப் படித்தவர்களையும் பெரியவாளின் விளக்கம்
ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மெக்காலே மனோபாவத்தை நிராகரிப்போம்!

சசி தரூர் ஐநாவின் மேனாள் துணை செயலாளர். சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர். திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் .

பஞ்சாங்கம் டிச.13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மாறும் பாசஞ்சர் ரயில் எண்கள்; இனி இந்த எண்கள்தான்!

தெற்கு ரயில்வே பெரும்பாலான பயணிகள் ரயில் எண்களை மாற்றியுள்ளது. மதுரை-விருதுநகர்- ராஜபாளையம் -வழி பாசெஞ்சர் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பறை இசை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்கக் கூடாது? : ஆளுநர் ரவி கேள்வி!

பறை இசையை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் ஊக்கப்படுத்துகிறோம் அதே வேளையில், பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஏன் ஆய்வு மேற்கொள்ள கூடாது?

கார்த்திகை பூரம்; நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீ ஆண்டாள் கார்த்திகை பூரம் தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

Topics

கங்கைக் கரை படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்!

“கங்கைக்கரையின் படகோட்டிகள் "வணக்கம் காசி!" என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்” இது...

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

Entertainment News

Popular Categories