இரும்பு பட்டறை உரிமையாளர் டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை!

Published:

dindukkal-suicide
dindukkal-suicide

திண்டுக்கல் அருகே உள்ள மீனாட்சிநாயக்கன்பட்டியைச சேர்ந்தவர் அழகர்சாமி( 50 ). இவர் நத்தம் சாலையில் இரும்பு பட்டறையில் வைத்து நடத்தி வந்தார். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலுக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது . தனி சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்து மீண்டார்.

இந்நிலையில் நேற்று காலை அரசு மருத்துவமனையில் இருந்து காலை வெளியே வந்த அழகர்சாமி, அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்சார வயரை பிடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் மின்சார வாரிய ஊழியர்கள் உதவியுடன் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • செய்தி: மோகன் கணேஷ், திண்டுக்கல்
ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img