ஒரே ஒரு முறை பாவற்காயை இப்படி செஞ்சு பாருங்க!

Published:

pavarkai

பாவற்காய் மசால்

தேவையான பொருட்கள்

பாகற்காய் – 1 /4 கிலோ
பெரிய வெங்காயம் – 2 நடுத்தரமானது
மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 /2 தேக்கரண்டி
சீரகத்தூள் – சிறிது
வெல்லம் துருவியது – 4 தேக்கரண்டி
எண்ணெய் – 1 1 /2 தேக்கரண்டி
உப்பு

தாளிக்க

கடுகு – 1 /2 தேக்கரண்டி
சீரகம் – 1 /2 தேக்கரண்டி
கருவேப்பிலை – 10 – 12 இலைகள்
பூண்டு நசுக்கியது – 3
பெருங்காயத்தூள் – 1 /4 தேக்கரண்டி

செய்முறை

பாகற்காயின் ஓரங்களை வெட்டி விட்டு, நீளமாக நறுக்கி பின் வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து வெடிக்க விடவும்.

பின் சீரகம் சேர்த்து பொன்னிறமானதும், கருவேப்பிலை, பூண்டு நசுக்கியது அல்லது பெருங்காயத்தூள் சேர்த்து 10 வினாடிகள் வதக்கவும். வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

அனைத்து மசாலா தூள்களையும், வெல்லத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள பாகற்காய் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வேண்டுமெனில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

மூடி போட்டு 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைக்கவும். .இடையில் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து மூடியை எடுத்து விட்டு மிதமான தீயில் நன்கு வதக்கவும். நன்கு வறுவலாகும் வரை கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும்.

20 – 25 நிமிடங்கள் வரை ஆகும். உப்பு சரி பார்த்து சாதத்துடன் பரிமாறவும்.

Related articles

Recent articles

spot_img