தமிழகத்தில் இன்று… 5880 பேருக்கு கொரோனா உறுதி! 119 பேர் உயிரிழப்பு!

Published:

corona - 2026

தமிழகத்தில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரம், இன்று,6488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

சென்னையில்  அண்மைகாலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று சென்னையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. சென்னையில் இன்று 984 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டது.  இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,109ஆக உயந்தது.

தமிழகத்தில்  இன்று 5880  பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப் பட்டவர் எண்ணிக்கை 2,85,024ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 6488 பேர் குணமடைந்து  வீடுகளுக்கு திரும்பினர் இதையடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,27,575  ஆக உயர்ந்துள்ளது.

 தமிழகத்தில் என்றும் இல்லாத வகையில் இன்று119  பேர் உயிரிழந்தனர் இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,690ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67,352 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 29,75,657.

சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 4896 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னையை அடுத்து அதிகபட்சமாக திருவள்ளூரில்  388 பேருக்கு இன்று கொரோனா உறுதி  செய்யப்பட்டது 

மாவட்ட வாரியாக குரானா பாதிப்பு விவரம்:

district-wise-covid-19-cases-aug-07
district-wise-covid-19-cases-aug-07

Related articles

Recent articles

spot_img