கனவின் விளைவு: இப்படி நீங்கள் கனவு கண்டால்…

Published:

fruitstall

மரங்களில் அதிகமாக இருக்கும் பழங்களை நீங்கள் கனவில் பார்த்தால், அவற்றை நீங்கள் பறிக்க முடியாத அளவிற்கு உயரமாக இருந்தால் உங்களுக்கு முன்னால் நல்ல வாய்ப்புகள் இருப்பதாக அர்த்தம்.

மரங்களில் இருக்கும் பழுக்காத பழங்களைப் பற்றிய கனவுகள் வந்தால் நீங்கள் நேர்மறையான மனதைக் கொண்டிருப்பதாகவும் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அர்த்தம்.

இப்படி நீங்கள் கனவு கண்டால் நீங்கள் செய்ய போகும் எந்த காரியத்திலும் அவசரப்படாமல் பொறுமையாக செய்ய வேண்டும் என்று அர்த்தம்.

பழுத்த பழங்களை எடுப்பது பற்றிய கனவு கண்டால் உங்கள் திட்டங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இது உங்கள் வேலை, உங்கள் குடும்ப வாழ்க்கை ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

பழுத்த பழங்களை எடுப்பது உங்கள் கடின உழைப்பு நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீங்கள் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் கனவில் பழங்களைப் பார்ப்பது போல் கண்டால் உங்கள் எதிர்காலம் செழிப்பாக மாறும்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

ஆனால் உங்கள் கனவில் பச்சை பழங்களை பார்ப்பது வேலை தொடர்பான விஷயங்களில் உங்கள் முயற்சி பயனளிக்காமல் போகலாம் .

அல்லது உங்கள் செயல்கள் சிந்தனையற்றவையாக இருக்கலாம். ஆகவே நீங்கள் கவனமாக செயல்படுவது நல்லது.

பழங்களை சாப்பிடுவது போல் கனவு கண்டால் உங்களுக்கு தொல்லை அதிகரிக்கும், நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள். ஆகவே புதிய முயற்சிகளை எடுக்கும் போது சிந்தித்து செயல்பட வேண்டும்.

உங்களது கனவில் நன்கு பழுத்த, எடுக்கத் தயாராக இருக்கும் பழங்கள் அல்லது பழங்கள் விழ தொடங்கும் அளவுக்கு பழுத்திருந்தால், நீங்கள் போட்டு வைத்திருக்கும் திட்டங்கள் நிறைவேறும்.

மேலும் வாழ்க்கையில் ஏற்படும் எந்த துன்பங்களையும் பொருட்படுத்தாமல் எல்லா முயற்சிகளிலும் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் என்று அர்த்தம்.

பழம் வாங்குவது அல்லது விற்பது போன்று கனவு கண்டால் நீங்கள் பிறரிடம் ஒப்பந்தம் செய்வதாக அர்த்தம். ஆனால் தொழில் செய்கிற நபர்களாக இருந்தால் அது உங்களுக்கு அதிக லாபத்தை தராது.

உலர்ந்த பழங்களை நீங்கள் கனவு கண்டால், உங்கள் மனநிலை நம்பிக்கை அற்றதாகவும் எதுவும் செய்ய தெரியாமல் இருப்பதாகவும் அர்த்தம்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

உங்களது கனவில் பழத்தை மற்றவர்களுக்கு கொடுக்க வைத்திருப்பதை போல் கண்டால் நீங்கள் அந்த நபரின் தலைவிதியில் விளையாட போகிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு ஏதேனும் ஒரு பழத்தை கொடுப்பது போல் கனவு கண்டால் எதிர்காலத்தில் நீங்கள் அவருடைய தனிப்பட்ட விவகாரங்கள் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்துவதில் ஈடுபடுவீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் கனவில் பழங்களை பறிப்பது போல் கண்டால் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஏற்படும்

தோன்றும்…

Related articles

Recent articles

spot_img