தங்கையை காதலித்த காதலனை குத்திக் கொன்ற‌ இளைஞன்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
Screenshot 2020 0807 193010 - 2026

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சக்திவேல். இவர் பொறியியல் படித்து முடித்து உள்ளார். அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் மணிவேல் குடும்பத்திற்கும், சக்திவேல் குடும்பத்துக்கும் இடையே கோவில் கட்டுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதனிடையே, மணிவேல் தங்கை கீர்த்திகாவுடன் சக்திவேல் நட்புடன் பேசி வந்துள்ளார். நாளடைவில் இது காதலாக மலர்ந்துள்ளது. ஏற்கெனவே அவர்களது குடும்பத்தில் இருந்து வரும் முன்விரோதம் இருந்து வரும் நிலையில், இந்த காதல் விவகாரம் மணிவேலுக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சக்திவேலிடம், “எனது தங்கையிடம் பேசுவதை நிறுத்திக் கொள் என்று பலமுறை நண்பர்கள் மூலமும் நேரடியாகவும் கூறியுள்ளார் மணிவேல்.

ஆனால் சக்திவேல் பேசுவதை நிறுத்தவில்லை. தொடர்ந்து கீர்த்தியுடன் பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிவேல் நேற்று இரவு மது போதையில் சக்திவேலின் வீட்டிற்கு சென்றுள்ளார். மாடியில் படுத்திருந்த சக்திவேலிடம் சென்று, “நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டியா?” என கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றிலும் , நெஞ்சு பகுதியிலும் குத்தி விட்டு தப்பி சென்றார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த திருவேகம்பத்தூர் காவல் துறையினர், சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய மணிவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.