29/09/2020 1:49 PM

சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் திமுக., கோரிக்கையை பாஜக., ஏற்காது!

ர்திருத்தத்தை வலியுறுத்தும் தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பதன் மூலம் சமூக நீதியை குழி தோண்டி புதைக்க

சற்றுமுன்...

முதல்வர் வேட்பாளர் யார்? முரண்டு பிடிக்கும் அரசியல்! ஓபிஎஸ் வீட்டில் முக்கியக் கூட்டம்!

அடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன் பகிரங்க மோதல் நடந்த நிலையில்,

நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்! சென்னையில் அமைகிறது என்ஐஏ., கிளை!

கௌஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னௌ, ராய்ப்பூர், சண்டிகர் ஆகிய இடங்களில்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர்! பிறகு என்ன நடந்தது?! வீடியோ வைரல்!

ஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.

தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.
udhayanidhi stalin
udhayanidhi stalin

மாநிலங்களில் உடனே நடைமுறைப்படுத்தாமல் புதிய தேசிய கல்வி கொள்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

புதிய தேசிய கல்வி கொள்கையில் 6வது பிரிவில், அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்கும் சமமான கல்வியை அளிக்க வேண்டும் என வலியுறுத்துவதால், இதை நிறுத்தி வைக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறாரா?

அல்லது, சமூக, பொருளாதார, பாலின மற்றும் உடல் குறைபாடுகளின் அடிப்படையில் சமூகத்தில் உள்ள பாகுபாடுகளால் மறுக்கப்பட்டு கொண்டிருக்கும் கல்வியை குழந்தைகளுக்கு தங்கு தடையில்லாமல் சென்று சேர்க்க வேண்டும் என வலியுறுத்துவதால், நிறுத்தி வைக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறாரா?

அல்லது பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வியில் இடைநிற்றல் அதிகளவில் இருப்பது பட்டியிலன, பழங்குடி, இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் தான் என்பதை புள்ளி விவரங்களோடு குறிப்பிட்டு, மேற்கண்ட பிரிவினர் அதிகம் வாழும் பகுதிகளை ‘சிறப்பு கல்வி மண்டலங்களாக’ அறிவித்து, அவர்களை ஊக்கப்படுத்த தங்கு தடையில்லா கல்வியை பெறுவதற்கான பல சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அளிப்பததோடு, கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என பாஜக அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துவதால், இதை நிறுத்தி வைக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறாரா?

அல்லது, தற்போதைய கல்வி முறையில் அதிகளவில் கல்வி மறுக்கப்படுவதும், இடைநிற்றல் அதிகமாய் இருப்பதும் பெண் குழந்தைகளுக்கே என்பதை கண்டறிந்து, நாட்டின் வளர்ச்சி, சமூக, கலாச்சார முன்னேற்றத்தில் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையில் பெண்களின் பங்கை உணர்ந்து, புதிய தேசிய கல்வி கொள்கையானது, பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டில் தீவிர கவனம் செலுத்துவதற்காக, பாதுகாப்பு மிக்க நவீன உறைவிட பள்ளிகளை உருவாக்குவதோடு, பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கழிப்பறை வசதிகள், மற்றும் இதர தேவையான வசதிகளை உறுதி செய்ய மத்திய அரசு நிதி தொகுப்பை உருவாக்கி அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குவதன் மூலம் பெண் குழந்தைகள் அதிக அளவில் கல்வியில் மேம்பட்டு விடுவார்கள் என்பதால், இதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று விரும்புகிறாரா?

அல்லது, சமூகநீதி காக்க அனைத்து குழந்தைகளையும் உள்ளடக்கிய, சமமான கல்வி பெறுவதற்கு பள்ளிகளில் நிலவும் தற்போதைய கலாச்சாரத்தை மாற்றியமைப்பது இன்றியமையாதது என்று தேசிய கல்வி கொள்கை குறிப்பிட்டிருப்பதோடு, பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் அனைவரும், அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமிக்க வகையில் அனைத்து பிரிவினரையும் கண்ணியத்தோடு கூடிய மரியாதையை பேணிகாக்கும் கலாச்சாரத்தை கடைபிடிக்கும் அமைப்பை உருவாக்குவது அவசியம் என்றும், சமூக ரீதியாக பின்தங்கிய சமுதாயத்திலிருந்து தரமிக்க கல்வி பயின்ற ஆசிரியர்களை, தலைவர்களை உருவாக்குவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, பட்டியிலன, சிறுபாண்மை மக்களின் மேம்பாட்டை உறுதி செய்யும் இந்த புதிய கல்வி கொள்கை என்பதால் நிறுத்தி வைக்க வேண்டும் என்கிறாரா?

அல்லது பண்டைய இந்திய நாகரீகத்தின் தத்துவத்தையும், வேற்றுமையில் ஒற்றுமையுள்ள இந்தியாவின் கலாச்சாரத்தையும் குழந்தைகள் கற்க வேண்டும் என்பதால் அனைத்து மதங்கள் குறித்தும், அவை அனைத்துமே பொதுவான கலாச்சாரத்தை, ஒற்றுமையை, ஒழுங்கை போதிக்கின்றன என்பதை குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும் என்பதை குறிப்பிடுவதாலும், ஒரே மதத்தின் வழிபாடு, சடங்குகள் அல்லது கொள்கைகள் பள்ளிகளில் கடைபிடிக்க கூடாது என்பதோடு அனைத்து மதங்களும் சமமாக போற்றப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுவதால் இந்த புதிய கல்வி கொள்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என விரும்புகிறாரா ஸ்டாலின்?

பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை சமுதாயத்தினரின் கல்வி மேம்பாட்டை , சீர்திருத்தத்தை வலியுறுத்தும் தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பதன் மூலம் சமூக நீதியை குழி தோண்டி புதைக்க முயற்சிக்கும் தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்களின் கோரிக்கையை பாஜக அரசு ஒருபோதும் ஏற்காது.

  • நாராயணன் திருப்பதி,
    (செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி)

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு இலங்கைத் தமிழரின் இரங்கல்!

இழந்து வாடும் இல்லத்தாருக்கும் பாரதீய சனதாக் கட்சியினருக்கும் ஈழத் தமிழரின் நெஞ்சார்ந்த இரங்கல்.

சமையல் புதிது.. :

சினிமா...

தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.

எஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்!

 நடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு  எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News

சோகமான ஆச்சரியம்! மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,!

ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..? Source: Vellithirai News

எஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா.  Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »