என் படத்தை மட்டும் ரீமேக் பண்ணி நடிச்சா போதுமா? இதையும் பண்ணுங்க! விஜய்க்கு சவால் விடும் மகேஷ்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
Screenshot_2020_0809_211936
Screenshot_2020_0809_211936

நடிகர் மகேஷ் பாபு இன்று தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று ஒன்றை நட்டுவைத்துள்ளார்.

நடிகர் மகேஷ் பாபு இன்று தன்னுடைய 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் டிவிட்டரில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கொரோனாவால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், தனது ரசிகர்கள் கூட்டமாக கூடி எந்த விதமான கொண்டாட்டமும் செய்ய வேண்டாம் என்று மகேஷ் பாபு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது மகேஷ் பாபு தன்னுடைய வீட்டில் மரக்கன்று ஒன்று நட்டுவைத்து அதை வீடியோவாக பதிவு செய்து டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில், “எனது பிறந்தநாளைக் கொண்டாட இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது.

இதை நடிகர்கள் விஜய், ஜூனியர் என்டிஆர், நடிகை ஷ்ருதிஹாசன் ஆகியோர் செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக சர்காரு வாரி பாட்டா படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு மகேஷ் பாபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது. இந்தப் படத்தை கீதா கோவிந்தம் பட இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்க உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.