ரூ.2 கோடி… ஹைதராபாத்தில் திருடி சென்னையில் பிடிபட்ட காவலாளி!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
theft-by-security
theft-by-security
  • வேலியே பயிரை மேய்ந்தால்…. வாட்ச்மேன் 2 கோடி திருடிக்கொண்டு ஓட்டம்.
  • மகனின் திருமண ரிசப்ஷனுக்காக சென்று வருவதற்குள் வாட்ச்மேன் இரண்டு கோடி ரூபாய்கள் பெறுமான நகைகள் மற்றும் சாமான்களோடு ஓட்டம்.
  • இந்த சம்பவம் ஹைதராபாத் குஷாய்குடாவில் நடந்துள்ளது.

ஹைதராபாத் குஷாய்குடா போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் பெரும் திருட்டு நடந்துள்ளது.

ஹைதராபாத் சைனிக்புரியில் வசிக்கும் தம்பதிகளின் மகனுக்கு அண்மையில் திருமணம் நடந்தது. பலக்நாமா பேலசில் ரிசப்ஷன் ஏற்பாடு செய்தார்கள். திரும்பி வந்து பார்க்கும்போது வீடு திறந்திருந்தது. நகைகளும் மதிப்பு மிகுந்த பொருட்களும் காணப்படவில்லை.

வீட்டுக்கு காவலாக இருந்த வாட்ச்மேனும் தென்படாததால் உடனே போலீசாருக்கு புகார் அளித்தனர். தாம் ரிசப்ஷனில் இருந்து திரும்பி வருவதற்குள் ஒரு கிலோ தங்க நகைகளோடு கூட வாட்ச்கள் மதிப்புமிக்க எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் திருட்டுப் போய் விட்டதாக புகாரில் குறிப்பிட்டார்கள்.

அவற்றின் மொத்த மதிப்பு 2 கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். நேபாளைச் சேர்ந்த பீம் என்பவர் ஆறு மாதங்கள் முன்புதான் வாட்ச்மேனாக சேர்ந்தவர் என்றும் திருட்டின் பிறகு அவர் தென்படவில்லை ஆதலால் அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீசாருக்கு தெரிவித்தார்கள். இதன்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

நரசிம்ம ரெட்டி என்பவர் தம் குடும்பத்தாரோடு ஞாயிறன்று மாலை தன் இளைய மகன் திருமண ரிசப்ஷனுக்காக டாஜ் ஃபலக்னாமா பேலஸ் சென்றிருந்தார். நரசிம்மா ரெட்டியின் மகன் சூர்யாவுடைய திருமணம் ஜூலை 29 ஆம் தேதி அன்று நடந்தது. ரிசப்ஷனுக்கு அனைவரும் மாலை 5 மணிக்கு வீட்டை விட்டுச் சென்றனர்.

வாட்ச்மேன் பீம் மட்டும் வீட்டில் இருந்தார். வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை உபயோக படுத்திக்கொண்டான் பீம். தன் நண்பனோடு சேர்ந்து வீட்டுக் கதவை உடைத்து வீட்டில் இருந்து 25 நகைகளையும் எலக்ட்ரானிக்ஸ் சாமான்களையும் வாட்ச் வைர நெக்லசும் எல்லாமாக 2 கோடி பெறுமான சாமான்களோடு வீட்டுக்காரரின் இருசக்கர வாகனத்தையும் திருடிக்கொண்டு இரவு 6 முதல் 8 மணிக்குள் ஓட்டம் பிடித்தான்.

இரண்டு திருடர்களும் ஸ்கூட்டியை மல்காஜ்கிரி அருகில் நிறுத்திவிட்டு திருட்டு சாமான்களை பையில் போட்டுக் கொண்டு நிதானமாக நடந்து சென்றனர். இந்த சம்பவம் எல்லாம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

ரிசப்ஷனுக்கு பிறகு திரும்பி வந்த ரெட்டி குடும்பத்தினர் கதவு திறந்து கிடப்பதையும் சாமான்கள் காணாமல் போனதோடு வாட்ச்மேனும் காணாமல் போனது கண்டு அதிர்ச்சிக்கு ஆளானார். உடனுக்குடன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

மல்காஜகிரி டிசிபி ரக்ஷிதா மூர்த்தி, குஷாயிகுடா ஏசிபி சிவகுமார், இன்ஸ்பெக்டர் மன்மோகன் மற்றும் டாக் ஸ்குவாட் சம்பவ இடத்தை வந்தடைந்தது தடயங்களை சேகரித்தனர். திருடர்கள் விட்டு சென்ற இரு சக்கர வாகனத்தையும் கைப்பற்றினர்.

சிசிடிவி கேமரா காட்சிகள் உதவியோடு ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் களிலும் அவர்களுக்காக தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அதோடுகூட 7 போலீஸ் குழுக்களையும் இதற்காக தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் சென்னையில் பிடிபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.