நாகர்கோவில் – நாகர்கோவில் அருகே நிதி நிறுவனத்தில் ரூ.100 கோடிக்கு மேல்
மோசடி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பணத்தை பறிகொடுத்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தலைமறைவான நிதி நிறுவன
உரிமையாளரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.



