தமிழகத்தில் இன்று… 5871 பேருக்கு கொரோனா உறுதி; 119 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
கொரோனா விவரம்
கொரோனா விவரம்

தமிழகத்தில் இன்று 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,520 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். 

சென்னையில் 6ஆவது நாளாக 1000க்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையில் இன்று 993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,12,059 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ்நோய்த் தொற்று காரணமாக சென்னையில் 20 பேர் உள்பட தமிழகத்தில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5278 ஆக அதிகரித்துள்ளது. 

அதே நேரம் இன்று ஒரே நாளில் 5633 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதை அடுத்து, 2,56,313 பேர் வீடு திரும்பியுள்ளனர். 

தற்போது, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட 52,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை அடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் 439 பேருக்கும், திருவள்ளூரில் 407 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 371 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப் பட்டவர்கள் நிலவரம்

district-wise-covid-aug-12
district-wise-covid-aug-12

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.