நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது வீடியோ பதிவிட்டு காதலனுக்கு அனுப்பி விட்டு பெண் தற்கொலை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
Screenshot_2020_0813_200230-1

திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த காதலன் பேச மறுத்ததால் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கே.வி.கோட்டையை சேர்ந்தவர் ராஜேஸ்வரி(32). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜேஸ்வரி காரைக்குடியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்தார்.
அப்போது கே.வி.கோட்டையை சேர்ந்த பிரபுதேவா என்பவருடன் நட்பு ஏற்பட்டு அவருடன் போனில் பேசி வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அவரிடம் தன்னை பார்க்க வருமாறு ராஜேஸ்வரி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், பிரவுதேவா வரவில்லை என்பதால் மனமுடைந்த ராஜேஸ்வரி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுதுள்ளார். இதன் தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ பதிவு செய்து, அதனை வாட்ஸ்அப்பில் பிரபு தேவாவுக்கு அனுப்பி விட்டு வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
அந்த வீடியோவில், “நீ இல்லாம என்னால் இருக்க முடியாது. எனக்கு உன்னை விட்டால் யாரும் இல்லை. நான் இருப்பதால் தானே இவ்வளவு கஷ்டம். செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து வச்சிருக்க. வேண்டாம் என்று முடிவு செய்து விட்டாய்” என அந்த பெண் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

பிரபுதேவா வீடியோவை பார்த்து விட்டு வீட்டின் உரிமையாளருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராஜேஸ்வரியின் சகோதரர் கார்த்திக்ராஜா கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.