பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு என்னைக் கேள்வி கேளுங்கள்: முதல்வருக்கு ஸ்டாலின் சவால்

சற்றுமுன் சென்னை தமிழகம்
IMG 20170917 WA0010 - 2026

சென்னை

திமுக முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டாலின் முதல்வருக்கு
சவால் விடுத்தார்.

எதிர்கட்சிகள் ஆளுநரிடம் கூறியும் ஆளுநர் பதில் கூற முடியவில்லை அவருக்கு
உத்தரவு வேறுபக்கம் இருந்து வருகிறது. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் வசூல்
ராஜா எம்பிபிஎஸ் சாக மாறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு உள்ளது. இன்னும் இரண்டு மூன்று
நாட்களில் நல்ல செய்தி வரும் நீதி நிலை நாட்டபடும் என்ற நம்பிக்கை உள்ளது

ஒரு வேளை நியாயம் கிடைக்கவில்லை என்றால் மக்கள் எதிபார்க்கின்ற மக்களை நம்பி மக்கள் துணையுடன் போராட்டம் நடத்தப் படும் என மு.க ஸ்டாலின் பேசினார்.

நீதிமன்றத்திலும் நல்ல தீர்ப்பு கிடைக்காவிட்டால் மக்களை ஒன்றுதிரட்டி
மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்ஸ்டாலின்.

பெரும்பான்மையை நிரூபித்து விட்டு ஏன் தலைவராகவில்லை என்று கேளுங்கள் உங்கள் தெருமுனையில் வந்து பதில் சொல்கிறேன்என முதல்வருக்கு ஸ்டாலின் சவால் விடுத்தார்.

நவோதயா பள்ளிகள் மூலம் இந்தியை தமிழகத்தில் திணிக்க முயற்சிப்பதை திமுக
கடுமையாக எதிர்க்கும் என மு.க.ஸ்டாலின் உறுதி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.