பெருகிய வெள்ளம்; குற்றாலத்தில் குளிக்கத் தடை!

Published:

courtallam falls aug09 - 2026

திருக்குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப் பெருக்கு காரணமாக குளிப்பதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் திருக்குற்றாலம் மெயினருவியில் 3 வது நாளாக குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், வெள்ள நீரின் அளவு குறைந்ததால், ஐந்தருவி, பழைய குற்றாலம்,புலியருவி ஆகிய அருவிகளில் குளிக்க அனுமதிக்கப் பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. காற்றுடன் மழையும் சேர்ந்து பெய்து வருகிறது. இதனால் குற்றாலம், செங்கோட்டை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் சீஸன் சூழ்நிலை நன்றாக உள்ளது.

குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் விழுகிறது. இதை அடுத்து பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img