ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது!

Published:

pm modi in bihar - 2026

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழகம் முடிவு செய்துவிட்டதாக, பிரதமர் மோடி தனது சமூகத் தளப் பதிவுகளில், தமிழில் பதிவிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு பிரதமர் மோடி இன்று பிற்பகல் சென்னை வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

மிகப் பெரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ள இந்தக் கூட்டத்தில் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அறிமுகம் செய்து, வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி வைக்கிறார். இந்தச் சூழலில் தமிழக வருகை குறித்து முன்னோட்டமாக பிரதமர் மோடி தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது…

தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!

மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

Related articles

Recent articles

spot_img