கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
sengottai-gh-siddha-doctor-kala
sengottai-gh-siddha-doctor-kala

செங்கோட்டையில் குற்றாலம் ரோட்டரி கிளப் சார்பில் கொரோனா தடுப்பு பணியாளர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு பாராட்டு, மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் வைத்து குற்றாலம் ரோட்டரி கிளப் சார்பில் கோவிட் 19 காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சிறந்த சமூக சேவகர்  விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஸ்கண்ணன் தலைமை தாங்கினார். நகர்மன்ற சிறப்பு அதிகாரி வெங்கடேஷ் முன்னிலைவகித்தார். குற்றாலம் ரோட்டரி சங்க தலைவர் ஸ்டாலின் ஜவஹர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

sengottai-gh-covid-wokers-
sengottai-gh-covid-wokers-

அதனைதொடர்ந்து கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செங்கோட்டை அரசு சித்த மருத்துவர் டாக்டர் கலா, மருந்தாளுனர்கள் முத்துமாரி, கிருஷ்ணகுமாரி, நகராட்சி தூய்மை பணியாளர்கள் 5 பேர் சமூக பணியாற்றிய 5 களப்பணியாளர்கள் என மொத்தம் 12 பேருக்கு சிறந்த சமூக சேவகருக்கான விருதுகளை சமூக சேவை பணிகள் தலைவர் ஸ்ரீராம் வழங்கி கௌரவித்தார்.

நிகழ்ச்சியில் சங்க செயலர் முருகன், முன்னாள் தலைவர் சந்திரன், ஆசிரியர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.