மது அருந்தி மனைவியோடு தினம் தகராறு! திடீரென மரணம்.. சந்தேக வட்டத்திற்குள் மனைவி!

Published:

priya

தினம் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி வந்த கணவன் திடீரென உயிரிழந்ததை அடுத்து மனைவி கொலை செய்தாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை அடுத்த ஆனந்ததாண்டவபுரம் பகுதியை சேர்ந்த ரவீந்திரன் என்பவருக்கும், திருவிழந்தூர் பகுதியை சேர்ந்த பிரியா என்பவருக்கும் 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆனதில் இருந்து ரவீந்திரன் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று அவர் குடித்துவிட்டு வந்து தன் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானப்படுத்திவிட்டு சென்றனர்

சற்று நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த பிரியா, தன் கணவன் மயக்கமடைந்து கிடப்பதாக தெரிவித்தார்.

ravindran

அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் வந்து பார்த்த போது ரவீந்திரன் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடல் மயிலாடுதுறை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிரியா மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

Related articles

Recent articles

spot_img