கழிப்பறைக்கு சென்ற 14 வயது சிறுமி! கொத்தனார் கொடுத்த பாலியல் தொல்லை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
anakapudhur

அனகாபுத்தூரில் பொது கழிப்பறைக்கு சென்ற 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

சென்னை பல்லாவரம் அடுத்துள்ள அனகாபுத்தூர் பகுதியில் இருக்கும் சாந்தி நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி வீட்டில் பாத்ரூம் வசதி இல்லாத‌ காரணத்தால் இயற்கை உபாதை கழிப்பதற்காக பொது கழிவறைக்கு சென்றார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வரும் 29 வயதுடைய பச்சையப்பன் என்பவன் குடிபோதையில் சிறுமியை கிண்டல் செய்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுமி, பச்சையப்பன் முகத்தில் எச்சி துப்பியுள்ளார். இதனையடுத்து, சிறுமியின் கன்னத்தில் பச்சையப்பன் ஓங்கி அறைந்துள்ளான்.

இதில் சிறுமியின் கன்னத்தில் காயம் ஏற்பட்டு பெரிதாக வீங்கியது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து தப்பிச்சென்ற சிறுமி இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பச்சையப்பனை கைது செய்தனர்.

பின்னர் மகளிர் காவல் ஆய்வாளர் விஜயகுமாரி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில்அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.