நாளையே கடைசி! தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் பணி!

Published:

jobs - 2026

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

காலிப்பணியிட விபரங்கள்:

மொத்த காலிப்பணியிடங்கள் – 11

Urban Planner /Town Planning Specialist பணிக்கானத் தகுதிகள்:

காலியிடங்களின் எண்ணிக்கை – 2

கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் Degree in Urban Planning or Regional Planning or Geography. மற்றும் 3 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

Capacity building/Institutional Strengthening Specialist பணிக்கானத் தகுதிகள்:

மொத்த காலிப்பணியிடங்கள் – 2

கல்வித் தகுதி :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Degree or Diploma in the development sector படித்திருக்க வேண்டும். இதோடு விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டு பணி முன் அனுபவம் அவசியம்.

MIS Specialist பணிக்கானத் தகுதிகள்

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

காலியிடங்களின் எண்ணிக்கை – 5

கல்வித் தகுதி :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Degree or Diploma in Computer Science/Electronics or MCA/PGDCA படித்திருக்க வேண்டும். இதோடு விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

Social Development Specialist பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் – 1

கல்வித் தகுதி :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Degree or Diploma in Social Sciences முடித்திருக்க வேண்டும். இதோடு விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டு பணி முன்அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

Information, Education and Communication (IEC) Specialist பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் – 1

கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் Graduate/Diploma in Mass Communication/ Public relations/Journalism/Social Work/Development முடித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டு பணி முன்அனுபவம் அவசியம்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், http://www.tnscb.org/wp-content/uploads/2022/04/TNUHDB_HFA_Notification_2022.pdf என்ற இணையதளப்பக்கத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

இதன் பின்னர் விண்ணப்பத்தினை எவ்வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Executive Engineer,
(HFA Cell) Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB),
5, Kamarajar Salai,
Chennai – 600 005

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி – ஏப்ரல் 22, 2022

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் – மாதந்தோறும் ரூபாய் 25 ஆயிரம் என நிர்ணயம்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, http://www.tnscb.org/wp-content/uploads/2022/04/TNUHDB_HFA_Notification_2022.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

Related articles

Recent articles

spot_img