health tips - 2026

அப்பாச்சி தீர்வு: சன்னி வாதம், தேகபலம், சிறுநீர் தாரையில் வலி, எரிச்சல், மலச்சிக்கல்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

சன்னி வாதம் குணமாக…

மஞ்சள், எருக்கம்பூ. இலுப்பைப் புண்ணாக்கு, மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து வறுத்து துணியில் முடிச்சாகக் கட்டி பொறுக்கும் சூடாக ஒற்றடம் கொடுத்து வர சன்னி வாதம் குணமாகும்.

தேக பலத்துக்கு…

தூதுவளைப் பூவை சுத்தம் செய்து குடிநீர் தயாரித்து சாப்பிட்டு வர தேகம் பலம் பெருகும். சுக்கில விருத்தி ஏற்படும்.

எரிச்சல் சரியாக

ஆண் குறியிலாகட்டும் பெண் குறியிலாகட்டும் சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டு துன்பப்படுவார்கள். ஆவாரம்பூ சர்பத் செய்து அவ்வப்போது குடித்து வர எரிச்சல் நிற்கும்.

சிறுநீர் தாரையில் ரணமா?

சிறுநீர் தாரையில் வலியும் எரிச்சலும் ஏற்பட்டு பிறகு ரணமாகி சிறுநீர் கழிப்பது பிராண சங்கடமாயிருக்கும். நித்திய கல்யாணி பூவுடன் நெருஞ்சில் சம அளவு எடுத்து கஷாயம் வைத்து சாப்பிட்டு வர சிறுநீர்த்தாரை சுத்தமாகும். இரணமும் குணமாகும்.

மலச்சிக்கலுக்கு…

மந்தாரைப் பூவை சுத்தம் செய்து நிழவில் உலர்த்தி, இடித்து சூரணித்து சிட்டிகையளவு சர்க்கரையுடன் சேர்த்து அல்லது தேனில் குழைத்து சாப்பிட கெட்டிப் போன மலத்தை இளக்கிக் கொடுக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.