சென்னை:
இன்று நடைபெறுவதாக இருந்த திமுக., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணை வரும் அக்டோபர் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. மேலும், மறு உத்தரவு வரும் வரை தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனால், இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுவதாக இருந்த திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.



