முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை..! ஆக.25இல் பாஜக.,வில் உறுப்பினராக… ஆக.29இல் துணைத் தலைவராக!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
annamalai-murugan
annamalai-murugan

முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை..! ஆக.25இல் பாஜக.,வில் உறுப்பினராக… ஆக.29இல் துணைத் தலைவராக!

ஆகஸ்ட் 25ஆம் தேதி தமிழக பாஜகவின் உறுப்பினராக சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

அண்ணாமலை கட்சியில் இணைந்த போது நாம் பதவிக்கு ஆசைப்பட்டு கட்சியில் சேரவில்லை என்றும் தாம் ஒரு சாதாரண கொண்டதாகவே கட்சியில் இணைந்து இருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் தமிழக பாஜகவின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் நாம் உறுதுணையாக இருப்பதாகவும் அப்போது தெரிவித்தார்

 பாஜக.,வில் அண்ணாமலை இணைந்தது தமிழகத்தில் திமுக அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளின்  உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் மோசமான வகையில் விமர்சிக்கப்பட்டது தனிநபர் தாக்குதல்கள் சமூக ஊடகங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டன அது அண்ணாமலை மீதான அச்சத்தை மட்டுமின்றி பாஜகவின் மீதான பொறாமையையும் வெளிக்காட்டியது

 இந்நிலையில் விமர்சனங்கள் ஒரு மனிதனை உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அண்ணாமலை பாஜகவின் துணைத்தலைவராக கட்சியில் சேர்ந்த நான்கே நாட்களில் பதவி பெற்று உயர்ந்துள்ளார். 

இதை அடுத்து, தமிழக பாஜக மாநில தலைவர் எல்..முருகனை  K.அண்ணாமலை இன்று கமலாலயத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.