அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தில்… துர்கா ஸ்டாலின் தரிசனம்!

சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
arjun anjaneyar temple durga stalin darshan - 2026

நடிகர் அர்ஜுன் சென்னையில் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அர்ஜுன் தீவிர ஆஞ்சநேய பக்தர். அதனால், கடந்த சில வருடங்களாக சென்னை போரூர் கிரகம்பாக்கத்தில், 180 டன் எடையில் ஆஞ்சநேயருக்கு சிலை வைத்து கோவில் கட்டியுள்ளார்.

இன்று தனது கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திய அர்ஜுன் “ இந்த கோவில் என்னுடைய 17 வருடக் கனவு. இதற்கு ஏன் 17 வருடங்கள் ஆனது என்பதை விட அந்த நாட்கள் எனக்கு அளித்த அனுபவங்கள் முக்கியமானவை. என் அம்மா, மனைவி, மகள்கள் என என் குடும்பம் எனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக நின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று நடந்த இந்தக் கும்பாபிஷேகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின்.மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்.

கடந்த வாரம், நடிகர் அர்ஜுன் முதல்வர் மு.க ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.