சீட்டாட்ட கிளப் விவகாரம்; போலீஸ் காவலில் அமைச்சரின் சகோதரர்!

Published:

karnool-club

கர்னூல் மாவட்டத்தில் சீட்டாட்ட கிளப் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சீட்டாட்ட கிளப் விவகாரத்தில், போலீஸார் காவலில் அமைச்சரின் சகோதரர் உள்ளார். சம்பவ இடத்தை போலீசார் முற்றுகையிட்டனர். அதன்பின் ஒவ்வொன்றாக வெளியில் வருகின்றன சீட்டாட்ட கிளப் ரகசியங்கள்.

இந்த வழக்கு தொடர்பாக ஆந்திர பிரதேஷ் அமைச்சர் ஜெய்ராமின் சகோதரர் நாராயணாவை சித்தகிரி போலீசார் காவலில் எடுத்தனர். அதேபோல் அவருடைய உதவியாளர்கள் ஜெகன், ஸ்ரீதர் இருவரையும் கூட கைது செய்தார்கள். இவர்களை இன்று மாலை செய்தியாளர்கள் முன்பு எடுத்து வரும் வாய்ப்பு உள்ளது.

karnool-club1

கும்மனூரு சீட்டாட்ட கிளப் அமைப்பில் கும்மனூர் நாராயணா முக்கியமானவர் என்று குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ஆந்திர அமைச்சர் கும்மனூர் ஜெயராம் சொந்த ஊர் கர்னூல் மாவட்டம் கும்மனூரில் பெரிய அளவில் சீட்டாட்டங்கள் நடைபெறுவதாக போலீசார் அறிந்துகொண்டு முற்றுகையிட்டனர். இந்த முற்றுகையில் 40 வாகனங்கள், 5.40 லட்சம் ரூபாய் கைப்பற்றினர். அதேபோல் 33 பேரை போலீசார் காவலில் எடுத்தார்கள்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

போலீசார் வந்து விட்டார்கள் என்று செய்தி அறிந்த உடனே சிலர் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக செய்தி. மிளகாய் பொடியை போலீசார் மீது தூவி விட்டு சீட்டு ஆட்டக்காரர்கள் எதிர்த்தாக்குதல் செய்தார்கள். அப்போது அமைச்சரின் உதவியாளர் இந்த விவகாரத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கிறார் என்று குற்றச்சாட்டுக்கள் வந்ததால் ஜெயராம் இது குறித்து பேசினார்.

இந்த விவகாரத்தில் தம் குடும்பத்துக்கு எப்படிப்பட்ட தொடர்பும் இல்லை என்று ஆந்திரா தொழிலாளர் துறை அமைச்சர் ஜெயராம் தெளிவுபடுத்தினார். அதேபோல் இதுபோன்ற செய்கைகளை எந்த சூழ்நிலையிலும் வரவேற்க கூடாது என்று கூறினார். தானும் தன் சகோதரரும் ஆலூரிலேயே இருக்கிறோம் என்றும் கும்மனூர் சொந்த ஊர் என்றாலும் தம் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் இருப்பது மட்டும் ஆலூரிலேயே என்றும் தெரிவித்தார்.

பொது மக்களின் அமைதிக்கு எந்த வித பங்கம் ஏற்பட்டாலும் தாம் எந்த சூழ்நிலையும் அதை சகிக்க மாட்டோம் என்றும் யார் தவறு செய்திருந்தாலும் விட்டுவிடக் கூடாது என்றும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டதாக கூறினார்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

போலீசார்மீது நடந்த தாக்குதலை அறிந்த கர்னூல் அடிஷனல் எஸ்பி கௌதமி சாலி சம்பவ இடத்தை அடைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img