சசிகலா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சற்றுமுன் தமிழகம்

sasikala vk twitter@aiadmkofficial1560435904. - 2026

சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெ.ஜெ. டிவிக்கு வெளிநாட்டில் உபகரணங்கள் வாங்கியதில் அன்னிய செலாவணி மோசடி என தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, பாஸ்கரன் நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சசிகலா வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் உயர் நீதிமன்ற உத்தரவு நகல் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சசிகலாவிடம் கேள்விகள் கேட்க ஏதுவாக வழக்கு ஆவணங்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்காக விசாரணையை ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்று சசிகலா வீடியோ கான்பரன்சிங்கிலும் பாஸ்கரன் நேரிலும் ஆஜராவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.