
12ம் வகுப்பு மறுமதிப்பீட்டில் 1,500 மாணவர்களுக்கு மதிப்பெண் அதிகரிப்பு எதிரொலியாக விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 300 ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறைக்கு, தேர்வுத்துறை பரிந்துரை செய்யும் என்றும் தெரிகிறது.



