“சைக்கிள் பெடல்”

“சைக்கிள் பெடல்”17eb84b3af187198933edebabedbcf5f radio stations guru 3 - 2026

(இன்றைக்கு மூன்று தலைமுறைக்கு முன்னிருந்த அந்தணப் பெரியோர்கள் தாங்கள் க்ருதார்தர்களாக வேண்டியதற்கு எவ்வளவு ப்ரும்மதேஜஸ் வேண்டுமோ அதைவிட அதிகமாகவே தம் புண்ணிய வாழ்க்கை என்னும் “சைக்கிளை தீவிரமாக பெடல்” செய்துவிட்டார்கள்.-இன்று நாம் ஒரு அனுஷ்டானம் செய்யாமல் அவர்கள் பெயரென்னும் கைப்பிடியை மாத்திரம் பிடித்துகொண்டிருப்பதால் “பாஸ்” செய்கிறோம்.

வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை – கும்பகோணம்

பெரியவா உபன்யாசம்-19-09-1947

புரட்டாசி 3 வெள்ளிக்கிழமை 19-9-1947

ஒருவன் சைக்கிளை விட்டுகொண்டு போகிறான் கால்களால் பெடலை அழுத்துகிறான் சைக்கள் வேகமா செல்கிறது நன்றாக பழக்கப்பட்டவன் பெடலை தீவிரமாக சுழற்றுகிறான் சைக்கிள் வேகமாக செல்கிறது பிறகு பெடலை சழற்றுவதை நிறுத்துகின்றான் கைகள் மட்டும் சைக்கிள் கைபிடியை பிடித்துக் கொண்டிருக்கிறது கால் சும்மாவே இருந்தாலும் முன்பு வேகமாக சுழற்றியதால் சைக்கிள் சுகமாக சென்றுகொண்டிருக்கிறது .

அரசாங்கத்தில் அநேக பரிக்ஷை வைத்திருக்கிறார்கள் அந்த பரிக்க்ஷைகளில் அனேகமாக பிராமணர்கள் அனேகமாக முதன்மையாக தேறுகிறார்கள் .யோக்யதையை அனுசரித்து (Merit) சிலரை கலாசாலைகளில் செர்த்துகொள்வோம் என்று அரசாங்கத்தில் சில காலம் அங்கீகர்த்திருந்தபோதும் அந்த யோக்யதாம்சத்தில் பிராமணச் சிறுவர்களே அனேகமாக முன் வந்தனர்

யோக்யதாம்சத்திர்க்கு எவ்வளவு மார்க்கு வேண்டுமோ அதை விட பன்மடங்கு மார்க்குகள் வாங்கி யோக்யதாம்சத்தில் எவ்வளவு பேரை எடுக்கிறார்களோ அவ்வெண்ணிக்கையை விட எவ்வளவோ அதிக மடங்கு முன் வந்து நிற்கிறார்கள்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.01 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இதெற்கெல்லாம் காரணம் ஒன்றிருக்கவேண்டும் . இப்பொழுது அந்த காரணம் ஒன்றும் தெரியவில்லை. ஆசார அனுஷ்டான விஷயத்தில் பிராமணமாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் ஒரு வித்யாசமும் காணப்படவில்லை. சில விஷயங்களில் இவர்களை விட மற்றவர்களை மேலாவுங்கூடச் சொல்லலாம், அப்படி இருக்க இவர்கள் விசேஷமாக பாஸ் செய்யும் யோக்யதைக்கு மூல காரணம் என்ன? அதையும் கண்டுபிடிக்க வேண்டும்

பகவான் பக்ஷபாதம் செய்யமாட்டார். இன்று அந்தணரும் மற்றவரும் அனுஷ்டானத்தில் ஒரே விதமாக இருந்தாலும் மற்றவரை விட

சில விஷயங்களில் அந்தணர் இன்னும் மோசமாக இருந்தாலும் அந்தணருக்கு மாத்திரம் இவ்விதம் அதிக மேதையை பகவான்

அருளியிருப்பது ஏன்?

முன்னோர்களின் பெடல்


இன்றைக்கு மூன்று தலைமுறைக்கு முன்னிருந்த அந்தணப் பெரியோர்கள் தாங்கள் க்ருதார்தர்களாக வேண்டியதற்கு எவ்வளவு ப்ரும்மதேஜஸ் வேண்டுமோ அதைவிட அதிகமாகவே தம் புண்ணிய வாழ்க்கை என்னும் “சைக்கிளை தீவிரமாக பெடல்”

செய்துவிட்டார்கள்.

இன்று நாம் ஒரு அனுஷ்டானம் செய்யாமல் அவர்கள் பெயரென்னும் கைப்பிடியை மாத்திரம் பிடித்துகொண்டிருப்பதால் “பாஸ்” செய்கிறோம்.

அவர்கள் நான்கு மணிக்கு ப்ரும்ம முகூர்த்தத்தில் எழுந்தார்கள்; நாம் அனேகமாக சூர்யன் எழுந்த பின்னரே நாம் எழுந்திருக்கிறோம்

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.2 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

அவர்கள் காலத்தில் சந்த்யாவந்தனம் செய்யாதவனை தேடி கண்டுபிடிக்கவேண்டும், நம் காலத்தில் செய்தவனை தேடி கண்டுபிடிக்கவேண்டும்

அவர்கள் காலத்தில் காலையிலும் மாலையிலும் சந்த்யாவந்தன படித்துறையில் கூட்டம் சேரும். நம் காலத்தில் காலை வேளைகளில் ஒருவிதமான “கிளப்” களிலும் மாலை நேரத்தில் வேறு விதமான “கிளப்”களிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றன

ஆத்மாவுக்கு உணவு ஊட்டவேண்டிய நேரத்தில் அனாத்மாவுக்கு உணவு ஊட்டுகிறோம்

நம் நாட்டிலுள்ள இதர மதஸ்தர்கள் எதோ ஒரு முறைப்படியாவது மாலை நேரத்திலும் இதர சில குறிப்பிட்ட சில சமயங்களிலும் ஈசனை நினைக்கும் பலத்தினால் உலக சம்பந்தம் ஒன்றுமில்லாமல் ஒரு ராஜ்யத்தையே பிடுங்கிக்கொண்டு போய்விட்டார்கள்

புக்கராயனின் குருவான வித்யாரண்யா சுவாமிகளும், சிவாஜியின் குருவான சமர்த்த ராமதாஸ் சுவாமிகளும் ஆசார சீலர்கள் அனுஷ்டனத்பர்கள், அனுபூதி நிஷ்டர்கள் நம் தர்மத்தை பாழ் செய்த பிற நாட்டவரின் பேயாட்டத்தை ஒழித்து தர்ம சாம்ராஜ்ய ஸ்தாபனம் செய்தவர்கள்

நாகரீகமா மிருகத்தனமா ?


மூன்று தலைமுறைக்கு முன்னிருந்த பெரியோர்கள் சரீசத்திலேற்படும் ஜல மல சுத்தி செய்யாதவர்கள் கிடையாது மண்ணும் ஜலபாத்திரமும் அவர்களுடன் எப்பவும் சித்தமாக இருக்கும். நாம் நாகரீகம் அடைந்துவிட்டோம் ஜல மல

சுத்தியை கூட விட்டுவிட்டோம், மிருகங்களாய் விட்டோம் , இதுவே நம் நாகரீகம்

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 27 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

சௌசம் என்னும் முதல் ஆசாரத்தை விட்டவன் செய்யும் எந்த கர்மானுஷ்டானமும் வெறும் சாம்பலில் செய்யும் ஹோமமே

மூன்று தலை முறைகளுக்கு முன்பு இருந்தவர்கள் செய்த பெடல் இன்னும் எத்தனை நாளைக்கு ஓடும்?, பெடல் செய்யப்படாத சைக்கிள் எவ்வளவு தூரம் ஓடும்? இப்பொழுதே மங்கி விட்டது

நமது பால்யத்தில் பிராமணச் சிறுவர்கள் முகத்தில் பார்த்த ப்ரும்ஹதேஜஸ் கூட இத்தலைமுறைகளிலுள்ள குழந்தைகளின் முகத்தில் காணோம் , படிப்புத் திறமையும் அப்படியேதான் .

ஆதலால் இனி நம் பின் தலைமுறைகள் ஈச்வர அனுக்ரகத்திலும் ப்ரும்ஹதேஜஸிலும் , உத்தம மேதையிலும் குறையாமலிருக்க

வேண்டுமானால் இனி நம் வாழ்வில் வர வர இவிஷயங்களில் க்ஷீனமடையாமல் இருக்க வேண்டுமானால் நாமும் தர்ம சாஸ்திரம் என்னும் “சைக்கிளின்” கர்மானுஷ்டானம் என்னும் “சக்கரத்தை” ஆசரனத்தால் “பெடல்” செய்யவேண்டும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories