சென்னை:
இன்றும், நாளையும் போலீசார் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் போலீசார் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் அதிரடியாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
முக்கியமான ஏதேனும் சம்பவங்கள் நிகழும் அல்லது எதிர்பார்க்கப்படும் நேரத்தில்தான், இதுபோன்று காவல் துறையினர் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும்.
அப்படி என்றால் இன்று அல்லது நாளை ஏதோ ஒரு முக்கிய சம்பவம் நடைபெற வாய்ப்புள்ளது என்று பரவலாகப் பேசப்படுகிறது.
அது, சட்டப் பிரிவு 365 தமிழகத்தில் கொண்டு வரப்படலாம் என்றும், ஆளுநர் சென்னையில் இருப்பதை கணக்கில் கொண்டு இவ்வாறு இருக்கக் கூடும் என்றும் செய்திகள் உலா வருவதால், தமிழகத்தில் மக்களிடையே ஏன், எதற்கு என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றனர்.
ஆனால், இது ஒரு வழக்கமான நிகழ்வு தான் , தேவைற்ற வதந்திகளை பரப்பவேண்டாம் என டிஜிபி டி.கே. ராஜேந்திரன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
வழக்கமாக அசாதாரண சூழ்நிலையில்தான் இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று டிஜிபி டி.கே. ராஜேந்திரன் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
சிறப்பு காவல்படையினர் முகாம்களுக்கு திரும்புவது வழக்கமான நடைமுறையே… இது ஒரு வழக்கமான நிகழ்வு தான், தேவைற்ற வதந்திகளை பரப்பவேண்டாம்… தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு காவல்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக 19 மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்த தகவலானது மாநாகர காவல்துறை ஆணையர், காவல் கண்காணிப்பாளர்கள் வழியாக அறிவுறுத்தப்படுகிறது என்று டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார்.