திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலில், ஜெயலலிதா கைரேகை
பதித்து விண்ணப்பம் அளிக்கப்பட்ட விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இது குறித்து. இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலர் அக்.,6ம் தேதி நேரில் ஆஜராகி
விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக, திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த
வழக்கில் இன்று இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. ஏற்கெனவே இது தொடர்பில்
தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்
அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அமைச்சர்கள் ஒவ்வொருவராக ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் அளிக்கப்பட்ட
சிகிச்சை குறித்து சந்தேகம் தெரிவித்தனர். ஜெயலலிதாவை தாங்கள் பார்த்தோம்
என்றாலும், அவர் சுய நினைவுடன் இருந்து தாங்கள் பார்க்கவில்லை என்று கூறி
வருவதால், ஜெயலலிதா கைரேகை வைத்து வெளியான வேட்பு மனுக்கள் குறித்த விவகாரம்
இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.