அசைவ உணவகத்தில் உண்ட 24 பேருக்கு மேல் வாந்தி மயக்கம்! காஞ்சிபுரத்தில் பரபரப்பு!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
vomit

காஞ்சிபுரம் பகுதியில் தனியார் அசைவ உணவகத்தில் சாப்பிட்ட 24க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் பிரபல அசைவ உணவகம் செயல்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த அசைவ உணவகத்தில், உணவு வாங்கி சாப்பிட்டவர்களின் 24க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ரயில்வே சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஏராளமானோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்ததால், தனியார் மருத்துவமனை நிர்வாகம், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் 24க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் வாந்தி, மயக்கம், காரணமாக அனுமதிக்கப்பட்டதால் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறுகையில், சம்பந்தப்பட்ட உணவகத்தில் இருந்து உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முடிவுகள் வெளியானதும் அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.