பிப்ரவரி 24, 2021, 11:07 மணி புதன்கிழமை
More

  தமிழகத்தில் இன்று… 5,976 பேருக்கு கொரோனா; 79 பேர் உயிரிழப்பு!

  Home சற்றுமுன் தமிழகத்தில் இன்று… 5,976 பேருக்கு கொரோனா; 79 பேர் உயிரிழப்பு!

  தமிழகத்தில் இன்று… 5,976 பேருக்கு கொரோனா; 79 பேர் உயிரிழப்பு!

  இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,92,507 ஆக அதிகரித்துள்ளது.

  கொரோனா விவரம்
  கொரோனா விவரம்

  தமிழகத்தில் இன்று  5,976 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று  79 பேர்  உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

  தமிழகத்தில் இன்று 5,976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து,  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,51,827ஆக உயர்ந்துள்ளது. 

  சென்னையில் இன்று 992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப் பட்டுள்ளது. இதனால், சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,39,720ஆக உயர்ந்துள்ளது. 

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 7,687ஆக அதிகரித்துள்ளது.

  தமிழகத்தில் இன்று 6,334 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு, டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,92,507 ஆக அதிகரித்துள்ளது. 

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 83,699 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதுவரை தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 49,62,357 ஆக உயர்ந்துள்ளது.

  சென்னையை அடுத்து அதிகபட்சமாக,  கோயம்புத்தூர் மாவட்டத்தில் 595 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டது. சென்னையை அடுத்த மாவட்டங்களான  செங்கல்பட்டு மாவட்டத்தில் 370 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 260 பேருக்கும்,  காஞ்சிபுரத்தில் 154 பேருக்கும்கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

  மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்: