அறந்தாங்கி அருகே பயிர்காப்பீடு கோரி அமரடக்கி கிராமத்தில் பஸ் மறியல் நடந்தது

சற்றுமுன்
28 09 17 atq amaradaki mariyal 01 - 2026

அறந்தாங்கி அருகே அமரடக்கி கடைவீதியில் பயிர் காப்பீடு தொகை வழங்ககோரி மறியல்
நடந்தது.
அறந்தாங்கி அருகே அமரடக்கி கிராமத்தை ஒட்டியுள்ள கிராமங்களான
வெளியாத்துார்,வங்கநகரம்,வீழிமங்கலம்,கட்டுக்கரை,கோலேந்திரம்,தாழனுார்,பரிவீரமங்கலம்
உட்பட 20 கிராமங்களுக்கு இது வரை உரிய முறையில் இன்ஸ்சூரன்ஸ் தொகை அரசு
தரப்பில் வழங்காமல் உள்ளதை கண்டித்து அறந்தாங்கி முன்னாள் எம்எல்ஏ உதயம்
சண்முகம் தலைமையில் விவசாயிகள்
ராமநாதன்,விஸ்வநாதன்,சங்கிலிமுத்துகருப்பையா,ஜேசுராஜ்,துரைநாகராஜ்
முன்னிலையில் மறியல் நடந்தது வருவாய் அதிகாரிகள் உடன் வராமல் போனதால் தற்போது
போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு ஆயுதபூஜைக்கு பிறகு போராட்டம்
தொடரும் என்று போராடடகுழு அறிவிப்பு செய்து கலைந்து சென்றனர் இந்த மறியலில்
350க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் இந்த மறியல் காரணமாக சுமார் ஒருமணி
நேரம் ஆவுடையார்கோயில் மீமிசல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.