சரவணப் பொய்கையில் செத்து மிதந்த மீன்கள்: இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
hindumunnani-thirupparankundram
–

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் கொத்து கொத்தாக மீன்கள் இறந்துபோனதை அடுத்து கோவில் நிர்வாக அலுவலகத்தை இந்து இளைஞர் முன்னணியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் பல்லாயிரக் கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

hindumunnani-thirupparankundram1

இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாதுகாப்பு கருதி சிசிடிவி பொருத்தக் கோரியும் இந்து இளைஞர் முன்னணி சார்பாக மாவட்ட செயலாளர் செல்ல குமார் தலைமையில் கோவில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு வாசலில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த திருப்பரங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் மதனகலா பேச்சுவார்த்தை செய்து தகுந்த நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து அங்கிருந்து போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

hindumunnani-thirupparankundram2

பின்னர் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் இதுதொடர்பாக கோவில் நிர்வாக கண்காணிப்பாளர் கர்ணனிடம் மனு அளித்தனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.