கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெற்றது   தெட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் 1100 ஆண்டுகள் பழமையானதாகும்.   ஒவ்வொரு மாதமும் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம் 
சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஷ்ணு சூத்த ஹோமம், மகாலட்சுமி ஹோமம் தொடர்ந்து 12 வகையான பொருட்களால் அபிசேகங்கள் நடைபெற்றது தொடர்ந்து பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம் வர பக்த்தர்கள் பஜனை பாடி வந்தனர் பின்னர்  தீபாராதனை நடந்தது ,விழாவிற்கு சுற்று வட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் 
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும், நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினரும் செய்திருந்தனர் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending