திருமலையில் இந்த முறை மாடவீதிகளில் ஸ்ரீவாரி வாகன சேவைகள்.
திருமலை ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் இந்த மாதம் 16 லிருந்து 24 வரை நடக்க உள்ளது. இந்த பின்னணியில் திருமலா திருப்பதி தேவஸ்தானம் அடிஷனல் ஈவோ தர்மாரெட்டி பிரம்மோற்சவ நிர்வாகம் குறித்து ஏற்பாடுகளை ரிவ்யூ செய்தார். பிரமோற்சவத்தில் வாகன சேவைகளை மாடவீதிகளில் நிர்வகிக்க வேண்டும் என்றும் தரிசன டிக்கெட்டு உள்ளவர்கள் மட்டுமே கேலரிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தீர்மானித்தார். உற்சவங்கள் நடக்கும் நாட்களில் காலை 8 முதல் 10 மணி வரையும் மாலை 7 முதல் 9 மணி வரையும் வாகன சேவைகளை நிர்வகிக்க போவதாகக் கூறினார். ஆலயத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் புஷ்ப காட்சி, எக்ஸிபிஷன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று ரிவ்யூவில் அதிகாரிகள் தீர்மானித்தார்கள்.
அண்மையில் ஸ்ரீவாரி ‘சாலகட்ல’ பிரம்மோற்சவம் கண்ணுக்கு விருந்தாக நடந்து முடிந்தன. கோவிட் தொற்று பின்னணியில் வாகன சேவைகளை கல்யாண மண்டபத்திலேயே செய்தார்கள்.
நவராத்திரி பிரம்மோற்சவம் வாகன சேவைகளை மாடவீதிகளில் நிர்வகிக்க வேண்டும் என்று தீர்மானித்ததால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே பக்தர்களை காலரிகளில் அனுமதிக்க உள்ளார்கள்.