வங்கி சேவைகுறைப்பாடு கிளை மேலாளருக்கு அபராதம்

Published:

நெல்லை மாவட்டம் நான்குனேரி ஐயப்பன்  என்பவரின்   கனரா வங்கி   சேமிப்பு கணக்கில் ரூபாய் 12/- பிரதமர் காப்பீடு (PMSY)  திட்டத்தில் கனரா வங்கி நான்குனேரி கிளை மனுதார் ஐயப்பன் ஒப்புதல் மற்றும் அனுமதி இல்லாமல் வங்கியில் இருந்து ரூபாய் 12 எடுத்துள்ளது.

மனுதார் ஐயப்பன்  கனரா வங்கி கிளை மேலாளர் மீது திருநெல்வேலி  நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் கடந்த 2016 இல் வழக்கு தொடர்ந்தார்.

கனரா வாங்கி  மனுதாரர் ஐயப்பன் சேமிப்பு கணக்கில் இருந்து  எடுத்த பணம் ரூபாய் 12/- திரும்ப கொடுத்துவிட்டது.

இந்தநிலையில் வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் நாராயணசாமி மற்றும் உறுப்பினர் சிவ மூர்த்தி ஆகியோர் மனுதார் ஐயப்பன் சேமிப்பு கணக்கில் இருந்து ரூபாய் 12/-  மனுதார் அனுமதி பெறாமல், விண்ணப்பம் எதுவும்  பெறாமல், காப்பீடு செய்தது சேவைகுறைப்பாடு ஆகும்  என்பதால் மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 5,000 வழக்கு செலவு ரூபாய் 3000/- சேர்த்து மெத்தம்  ரூபாய் 8,000/ ஒருமாத காலத்திற்குள்  மனுதாரிடம் நேரடியாக நான்குனேரி   கனரா  வங்கி கிளை மேலாளர் வழங்க வேண்டும் என  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img