நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த 4 பேரும் பலி; உறவினர்கள் சாலை மறியல்- பரபரப்பு!
கந்துவட்டி காரணமாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த 4 பேரும் உயிரிழந்தனர். கந்துவட்டி கொடுமை காரணமாக, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் இசக்கிமுத்து தன்னுடைய குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் அவரது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்நி்லையில் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகச்சை பெற்று வந்த இசக்கிமுத்துவும் இன்று உயிரிழந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது. இதனால் உயிரிழந்த இசக்கிமுத்து உறவினர்கள்…
கந்துவட்டி காரணமாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த 4 பேரும் உயிரிழந்தனர்.
கந்துவட்டி கொடுமை காரணமாக, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் இசக்கிமுத்து தன்னுடைய குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் அவரது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.
இந்நி்லையில் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகச்சை பெற்று வந்த இசக்கிமுத்துவும் இன்று உயிரிழந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.
இதனால் உயிரிழந்த இசக்கிமுத்து உறவினர்கள் போலீசாரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Leave a Reply