புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 5 பேர்கள் கைது

சற்றுமுன்
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டை பட்டிணத்தில்  இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு  விசைப்படகு மற்றும் 5  மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டிணம் மற்றும் ஜெகதாப்பட்டிணத்தில் 600க்கும் அதிகமான விசைப்படகில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்கள்.
இந்த தொழிலில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மட்டுமின்றி புதுக்கோட்டை ராமநாதபுரம் தஞ்சை தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர்களும் தங்கிதொழில் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று காலை ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து 174 விசைப்படகிலும் கோட்டைப்பட்டிணத்தில் இருந்து 114  விசைப்படகிலும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.இவர்கள் அனைவரும் நடுக்கடலில் மீன்பிடித்தபோது   கோட்டை பட்டினத்தை  சேர்ந்த  இன்னாசி(40)  ஜெமினி(43)  கருப்புசாமி(47)   பூமி(52)  சுதாகர் (19)  உட்பட  5   பேர்களும் கடலில் நெடுஞ்தீவு அருகே மீன்பிடித்தபோது எல்லைதாண்டியதாக குற்றஞ்சாட்டி அவர்களை இலங்கை கடற்படை நடுகடலில் வைத்து கைது செய்து காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
|
இச்சம்பவம் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஏற்கனவே 56 விசைப்படகும் 12 மீனவர்களும் இலங்கை சிறையில் உள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.