கொலை, கொள்ளை, வழிப்பறி என பல வழக்குகளில் தொடார்புடைய 5 பேர் கைது.

சற்றுமுன்
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர் சத்திரம் பகுதியை சேர்ந்தவர்  அரிகிருஷ்ணன். இவர்  இன்று காலை பாவூர் சத்திரம் பேரூந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்துள்ளார்  அப்போது அந்த வழியாக இரண்டு காரில் வந்த கும்பல் அரிகிருஷ்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டிஅவரிடமிருந்து  ரூ.1000-யை பறித்து சென்றது.
தகவலறிந்த காவல்துறையினர்  பாவூர்சத்திரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா;. அப்போது வட்டலூர் வழியாக வந்த இரு கார்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா;. அந்த வாகனங்களில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தது. இரு வாகனங்களில் வந்த 5 பேரை பிடித்து விசாரனை மேற்கொண்டதில் தூத்துக்குடியை சேர்ந்த துரை முருகன், கருப்பசாமி, உதயகுமார் , குரும்பூரை சேர்ந்த ஜேசுபாலன், கன்னியாகுமாரி பகுதியை சேர்ந்த அர்ஜுன், என்பதும் இவர்கள் பேரூந்து நிலையத்தில் வழிபறியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து மேலும் காவல்துறை நடத்திய விசாரனையில் தூத்துக்குடியை சோ;ந்த துரை முருகன் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 20 வழக்குகள் உள்ளது. ஜேசு பாலன், அர்ஜுன்,கருப்பசாமி மீது திருட்டு, வழிப்பறி என பல வழக்குகள் பதிவாகி உள்ளது எனவும் இவர்கள் 2016-ம் ஆண்டு சங்கரன்கோவிலில் நடைபெற்ற கொலைக்கு பழிக்கு பழியாக கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் காவல்துறையினர்  தெரிவித்தனர்  இவர்கள் மீது திருவண்ணாமலை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி உட்பட தென் மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் கூலிப்படையாக செயல்பட்டதாகவும் காவல்துறையினர்  தெரிவித்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.