அறந்தாங்கி செலக்சன் பள்ளியில் உணவு திருவிழா

Published:

அறந்தாங்கி

புதுக்கோட்டைமாவட்டம்

அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக உணவுத் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் பெற்றோர்களின் உணவுப் படைப்புகளை படைத்து உணவுத் திருவிழா நடை பெற்றது.

 

விழாவில் பள்ளித் தாளாளர் கண்ணையன் தலைமை ஏற்க சிறப்பு விருந்தினராக முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவரும் ஹோட்டல் சங்கத் தலைவருமான திரு. கராத்தே கண்ணையன் மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் நாராயணசாமி, முன்னாள் ரோட்டரி சங்க செயலாளர் Rtn.ராஜ்மோகன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

 அனைவரையும் பள்ளி முதல்வர் சுரேஷ்குமார் வரவேற்க நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் கங்கா, சிறப்பு ஆசிரியர் இந்து, உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் செய்து இருந்தனர். முடிவில் பள்ளியின் 3ஆம் வகுப்பு மாணவி அஸ்வின் பானு நன்றி கூறினார்

Related articles

Recent articles

spot_img